இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரே நம்பிக்கையாக சர்வதேச நாணயநிதியம் மாத்திரம் காணப்படுகின்றது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுச ராமநாயக்கவுடனான கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பொருளாதார மீட்சி திட்டமே இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரேவழியாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் வேறு எவரும் இலங்கையை மீட்பதற்கு உதவ தயாரில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நந்தலால் வீரசிங்கவிற்கு முன்னர் ஆளுநராக பணியாற்றியவர்கள் முன்னெடுத்த உள்நாட்டு தீர்வு காரணமாக இலங்கை மார்;ச் மாதத்தில் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டதுடன் ஏப்பிரலில் வங்குரோத்து நிலையை அறிவித்தது.
இந்த அளவிற்கு நாங்கள் வந்தவுடன் சர்வதேச நாணயநிதியமே ஒரே வழிமுறையாக உள்ளது என நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
முன்கூட்டியே நாங்கள் செயற்பட்டிருந்தால் நாங்கள் வேறு விடயங்கனை முயற்சி செய்திருக்கலாம் என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் எங்களின் அன்னியசெலாவணி கையிருப்பு இவ்வளவு தூரம் குறைந்தவுடன் எங்களிற்கு எவரும் கடன்களை வழங்க தயாராக இ;ல்லாத போது உறுப்பு நாடொன்று ஏதோ ஒரு கடனை பெறுவதற்கான ஒரேயொரு நம்பிக்கையாக சர்வதேச நாணயநிதியமே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

