சென்னை பசுமைவழிச் சாலை – டி.ஜி.எஸ் தினகரன் சாலை சந்திப்பில் சென்னை மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிகள் நடைபெறவுள்ளதால் வருகிற 24-ந்தேதி முதல் ஒருவார காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் சோதனை அடிப்படையில் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.
ஆர்.கே.மட சாலை – மந்தைவெளி சந்திப்பில் இருந்து பிராடிஸ் கேசில் சாலை வரை ஒரு வழிபாதையாக மாற்றம் செய்யப்படும்.
மந்தைவெளியில் இருந்து வாகனங்கள் ஆர்.கே. மடச் சாலையை நோக்கி அனுமதிக்கப்படமாட்டாது. பிராடிஸ் கேசில் சாலையில் இருந்து ஆர்.கே.மடச் சாலை நோக்கி செல்லலாம். அடையாறிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் கிரீன்வேஸ் சாலை சந்திப்பில் வலதுபுறமாக திருப்பிவிடப்பட்டு டி.ஜி.எஸ் தினகரன் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
மந்தைவெளி மற்றும் மயிலாப்பூர் செல்லும் வாகனங்கள் பிராடிஸ் கேசில் சாலை வழியாக ஆர்.கே.மடச் சாலை வழியாக செல்லலாம். சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் நேராக செல்லலாம். மயிலாப்பூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் மந்தைவெளி சந்திப்பில் இடதுபுறமாக திருப்பி விடப்பட்டு சவுத் கெனால் பேங்க் சாலை வழியாக சென்று சவுத் கெனால் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி டி.ஜி.எஸ்.தினகரன் சாலை அடைந்து அவர்களது செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.

