திரு.செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் டென்மார்க்கில் மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

215 0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் மற்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு.செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் டென்மார்க்கில் மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் கலந்துகொண்ட பின்னர் திரு. செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் டென்மார்க்கும் விஜயம் செய்துள்ள நிலையிலேயே கடந்த 18.10.2022 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 19.00 மணிக்கு டென்மார்க் கொல்பேக் நகரில் பொது மக்களுக்கான சமகால அரசியல் பற்றிய விளக்க கூட்டம் நடைபெற்றது. அதில் இன்றைய காலகட்டத்தில் நடைபெறும் இலங்கை அரசியல் நகர்வுகள் மற்றும் தமிழ் மக்களின் பங்களிப்பு, தமிழர் தரப்பின் அரசியல் நிலைப்பாடுகள் பற்றிய விவரங்களை எடுத்துரைத்ததோடு, கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் சந்திப்பு நடந்தேறியது.

மேலும் 19.10.2022 புதன்கிழமை அன்று டென்மார்க் பாராளுமன்றத்தில் பசுமைச் சுதந்திர கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிக்கண்டர், மற்றும் டென்மார்க் வெளியுறவுத் துறை அமைச்சரின் கீழ் இயங்கும் இலங்கைக்கான அதிகாரிகளையும் சந்தித்து தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசினால் மேற்க்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் மற்றும் திட்டமிட்டு நடத்தப்பட்டுவரும் தமிழினத்திற்கு எதிரான ஒடுக்குமுறைகளைக்கு எதிராக நியாயமான முறையில் தீர்வு பெற்றுத் தரக்கோரி, சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு திரு.செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.