22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை ஜனநாயகத்தை மிக முக்கியமானதாக கருதும் அனைவருக்கும் கிடைத்த வெற்றி

233 0

22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை ஜனநாயகத்தை பெறுமதியான விடயமாக கருதும் அனைத்து இலங்கையர்களிற்கும்  கிடைத்த வெற்றி என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

சுமூகநீதிக்கான தேசிய இயக்கத்தின் உறுப்பினர்களாகிய நாங்கள் இந்த அரசியல் சீர்திருத்தத்திற்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவில் அரசியல் சக்திகளிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில்  ஏதேச்சதிகார சர்வாதிகார ஆட்சி நிலவும் நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்ட 20 வது திருத்தத்தை  நீக்கி 22 வது திருத்தத்தை நாடாளுமன்றம் இன்று நிறைவேற்றியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக 20வது திருத்தம் கொண்டுவரப்பட்டவேளை அதனை ஒரு அமைப்பாக நாங்கள் கடுமையாக எதிர்த்தோம்;,அது நிறைவேற்றப்பட்ட பின்னரும் நாங்கள் அதனை எதிர்த்தோம் என கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனநாயகத்தை  பாதுகாப்பதற்கும் மக்களின் கௌரவத்தையும் அபிலாசைகளை பாதுகாப்பதற்கும் 22வது திருத்தம் போதுமானதல்ல என நாங்கள் கருதவில்லை என்பதையும் மீண்டும் தெரிவிக்கின்றோம் எனவும் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் எடுத்துள்ள நடவடிக்கையை புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படும் வரை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவேண்டிய முக்கியமான இடைக்கால நடவடிக்கையாக நாங்கள் கருதுகின்றோம்,இதனடிப்படையில் இதனை குறிப்பிடத்தக்க சாதனையாக கருதுகின்றோம் என தெரிவித்துள்ள கரு ஜெயசூரிய சமூகநீதிக்கான தேசிய இயக்கம் மக்களிற்கு கண்ணியம் நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் புதிய அரசமைப்பு தேவை என்பது குறித்து உறுதியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.