இம்ரான்கான் ஐந்து வருடங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை- தேர்தல் ஆணையம் அதிரடி

227 0

பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அடுத்த ஐந்து வருடங்களிற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு பாக்கிஸ்தானின் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இம்ரான்கானின் சட்டத்தரணியொருவர் இதனை உறுதி செய்துள்ளார்.

இம்ரான்கான் அடுத்த ஐந்து வருடங்களிற்கு தேர்தலில் போட்டியிடமுடியாது என தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதவியிலிருந்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்தார் ஊழலில் ஈடுபட்டார் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே அவருக்கு தேர்தல் தடை விதிக்கப்பட்டுள்ளது.