பொகவந்தலாவை – டியன்சின் தோட்ட பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மது போதையில் வந்த மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் அப் பெண்ணை தாக்கியமை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சமபவத்தின் பின் தலைமறைவாகியிருந்த மூன்று சந்தேக நபர்களை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது பற்றித் தெரிய வருவதாவது,
மது போதையில் வந்த மூவர் மேற்படி பெண்ணை துஷ்பிரயோகப்படுத்தி விட்டு தாக்கியும் உள்ளனர். பின்னர் தலை மறைவாகியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பெண் காயங்களுக்கு உள்ளான நிலையில் அவசர பொலிஸ் தொலைபேசி சேவைக்கு தகவல் வழங்கி அம்புலன்ஸ் வண்டியின் ஊடாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரியின் அறிக்கை தெரிவித்துள்ளது.
பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் டியன்சின் தோட்டத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்ததுடன்,
சந்தேக நபர்களை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

