கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிட்டிய பிரதேசத்தில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் 48 வயதுடைய நபர் கொஸ்லந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேதபரிசோதனைக்காக கொஸ்லந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொஸ்லந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

