கடந்த மே 9ஆம் திகதி இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் பின்னர் நடைபெற்ற வன்முறைகளின்போது பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வீடு மற்றும் காரியாலயத்துக்குள் அத்துமீறி நுழைந்து, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் தீ மூட்டியமை தொடர்பில் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி சம்பவம் தொடர்பான விசாரணையின் போது கிடைக்கப்பெற்ற காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர்களின் குறிப்பிட்ட அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு பொதுமக்கள் கீழே தரப்பட்டுள்ள இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் பொலிஸ் தலைமையகம்: 032 – 2265222
புத்தளம் பொலிஸ் தலைமையக பொலிஸ் அதிகாரி: 071 – 8591292




