ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேலும் 4 பேர் விடுதலை

193 0

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சந்தேகநபர்களை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக 54 சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,​​சம்பவம் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றில் வெளிப்படுத்துமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.