இந்து சமுத்திர பூகோள அரசியல்

148 0

ந்து சமுத்திரத்தின் பூகோள அரசியல் துரதிர்ஷ்டவசமாக அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு ஒரு பேரிடியை கொடுத்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்லூரி பட்டமளிப்பு விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தெரிவித்திருந்தார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி தேசிய பாதுகாப்பு கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் உரையாற்றியபோது வெளிநாட்டுக் கொள்கைக்கான தனது அணுகுமுறை அம்சங்களில் ஒளிவீசிய சில இந்து சமுத்திர பூகோள அரசியல் சக்திகள் மற்றும் ஏனைய கடினமான சக்திகளை பற்றி ஜனாதிபதி தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இதன்போது அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்திறங்கிய சீனாவின் Yuan Wang 5 ஆராய்ச்சி கப்பலினால் தீவிரமாக பரவிய இராஜதந்திர பதற்ற நிலைகள் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

அந்த சீன கப்பல் உள்நுழைவதற்கு வழங்கியிருந்த அனுமதியை வாபஸ் பெறுமாறு இந்தியாவும் ஐக்கிய அமெரிக்காவும் அழுத்தங்களை பிரயோகித்ததையடுத்து, சீனா எதிர்த்து செயற்பட்டது.

அதனையடுத்து, ஜனாதிபதியுடன் அவசர கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. அதேவேளை ஆட்சேபனைகளுக்கு தெளிவான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை. எனினும், அந்த கப்பல் துறைமுகத்தில் நிற்க அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை குறிப்பிட்டே ஜனாதிபதி ‘இந்து சமுத்திரத்தில் எமது நிலை என்ன’ என்ற விடயம் தொடர்பாக  தொடர்ந்து பேசினார். அவரது கருத்துக்களின் சாராம்சமாவது,

இந்து சமுத்திரம் வேறுபட்டது

இந்து சமுத்திரம் பசுபிக் சமுத்திரத்திலிருந்து வேறுபட்டது. ஐக்கிய அமெரிக்கா பரந்தளவில் பிரசாரப்படுத்திய ‘இந்து பசுபிக்’ என்ற வரைவிலக்கணங்கள் அர்த்தமற்றவை,

அதேவேளை இலங்கையை பொறுத்தவரையில், நாம் இவை ஒன்றாக இணைந்துள்ள இரண்டு தனியான சமுத்திரங்கள் என்ற ஆசிய வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்கின்றோம்.

பசுபிக் என்ற பதற்றம் இங்கு ஊசலாடுவதை நாம் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை அது எமக்கு மட்டுமல்ல, ஆசியாவுக்கும் அவசியமில்லை. தென் சீன கடலுக்கு அப்பால் அது ஊசலாடுவதை ஆசியா அனுமதிக்காது. ஆகவே, நாம் அந்த விடயத்தில் ஆசியாவுடன் ஆதரவாக இருக்கின்றோம்.

அம்பாந்தோட்டை ஒரு இராணுவ துறைமுகம் அல்ல. ஆனாலும், அது ஒரு வணிக துறைமுகம்.

இலங்கை இராணுவம் அங்கு நிலைகொண்டிருந்தது. இது ஒரு வணிக துறைமுகமேயொழிய வேறொன்றல்ல என்பதை இது உறுதி செய்கின்றது.

பலர் தேவையற்ற விதத்தில் முடிவுகளை எடுக்கும் எமது மூலோபாய முக்கியத்துவத்தையே இது சுட்டிக்காட்டுகின்றது.

முதலாவதாக, ஒருபுறத்தில் அம்பாந்தோட்டை மீதான அண்மைக்கால மறைமுக போராட்டத்தில் சம்பந்தப்படும் பெரும் வல்லரசுகளுக்காகவா இதெல்லாம் என்ற சந்தேகமும் எழுகின்றது. இரண்டு அணுவாயுத சக்திகள் ஒன்றுக்கொன்று எதிர்க்கின்ற ஹிமாலயா பிராந்தியத்தில் இந்த பெரும் பதற்றம் உருவாகின்றது.

இரண்டாவதாக, போர்க்களங்கள் நிலைப்படுத்தப்பட்டுள்ளதும், இராணுவமயமாக்கல் நிகழ்ந்துகொண்டிருக்கின்றதுமான ஆபிரிக்காவினதும் செங்கடலினதும் பலத்திலேயே இது உருவாகின்றது.

உண்மையில், ஆபிரிக்காவின் பலத்தில் இராணுவமயமாகின்ற சகல தரப்புகளும்  இராணுவமயமாகாதவை. நாம் மாத்திரமே இராணுவமயமாகின்றோம். இறுதியில் அவதானித்தால், அந்த தரப்புகள்தான் இராணுவமயத்தில் உள்ளன.

ஆதலால், இதுவே வாழ்வின் யதார்த்தமும், ஒரு நாடு சிறிய நாடாக இருப்பதில் உள்ள அபத்தமும் ஆகும்.

இந்து சமுத்திரத்தின் ஊடாக பெருமளவான சக்தி விநியோகங்கள் மற்றும் கப்பல் பயணங்கள் எதுவும் நிகழ்வதில்லை. பிணக்கு அல்லது பெரும் அதிகார பலப்போட்டி இலங்கைக்கு அவசியமில்லை. அதுதான் எம்மால் சகிக்க முடியாதவொன்று என தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 26ஆம் திகதி திங்கட்கிழமை  இந்தியாவின் StratNews Global செய்தி ஊடகத்துடன் இடம்பெற்ற ஒரு நேர்காணலின்போது, ஜனாதிபதி இரண்டு சமுத்திரங்களின் பூகோள அரசியலை பற்றி மேலும் விளக்கினார்.

நாம் அவ்வாறானவர்கள் அல்லர். ஆனால், நாம் ஒன்றாக செயல்படுதல் வேண்டும். காலகாலமாக சீனா இந்து சமுத்திரத்தில் பயணித்து வருகின்றது. அரபு நாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் கப்பல்கள் சீனாவுக்கு பயணிக்கின்றன. இவ்விரு நாடுகளினதும் செல்வாக்கு பரந்துள்ளது. ஆகவே, நாம் ‘இந்து பசுபிக்’ என்கையில் இரண்டு வித்தியாசமான முறைமைகள் உண்டு என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்கின்றோம் எனவும் ரணில் கூறியிருந்தமையும் குறப்பிடத்தக்கது.

எமக்கு பக்கச்சார்பு கிடையாது

தேசிய பாதுகாப்பு கல்லூரி விழாவில் கலந்துகொண்டு ஜனாதிபதி பேசியபோது, இலங்கை எந்தவொரு வலிமையான போராட்டத்திலும் இணைந்துகொள்ளவோ அல்லது அத்தகைய அதிகாரபலப் போட்டியில் பக்கசார்பாக நடந்துகொள்ளவோ மாட்டாது என கல்லூரி விழாவில் தொடர்ந்து ஜனாதிபதி உறுதியளித்தார்.

மேலும், அவர் உரையை தொடர்கையில்,

இது ஓரளவு சர்ச்சைக்குரிய விதத்தில் உருவெடுத்திருக்கின்ற ஒரு நிலையாகும்.  பொருளாதார நெருக்கடி நிலையில் நாடு சிக்கித் தவிக்கின்றபோது மூலோபாய அனுகூலத்தின் நிமித்தம் தீவிரமாக போராடுகின்ற ஒவ்வொரு வலிமையினதும் அருளில் எத்தகையதொரு சமநிலையை பேணுவது என்ற கருமம்தான் எமக்குள்ள விடயம்.

கடந்த மார்ச் மாதத்தில் மிகவும் அவசரமாக விநியோக பொருட்கள் தேவை என்றிருந்த நிலையில் இலங்கை, இந்தியாவிலிருந்து ஒரு பில்லியன் டொலர் கடனை பெறுவதற்கு முன்னர், இந்தியாவுடன் பாதுகாப்பு சம்பந்தமான பல ஏற்பாடுகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதாக (முன்னைய அரசாங்கத்தினால்) தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்ல, தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளையக்கூடும் என்றளவுக்கு பிரச்சினைகள் வெளியாகின.

இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்தவித பங்கமும் நேரிடக்கூடாது என்பதை நாம் உறுதிப்படுத்துவதும் இலங்கையின் பாதுகாப்பை கவனித்துக்கொள்வதும் எமது நோக்கமாகும் என்றார்.

மேலும், தொடர்ந்து வெளியான ஜனாதிபதி ஊடகப் பிரிவினது பதிவுகளின் அடிப்படையிலும் சில விடயங்களை ஜனாதிபதியின் கூற்றாக கருதலாம். அவற்றில் குறிப்பிடப்பட்டதாவது,

நாம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளோம். எதிர்காலத்திலும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது.

எல்லா நேரத்திலும் உதவிக்கரம் நீட்டும் பெரும் சகோதர நாடு இந்தியா. அதன் வெளிநாட்டுக் கொள்கை கட்டமைப்பில் புதிது என்று ஒன்றும் கிடையாது.

‘பெரும் அதிகாரபலப் போட்டியில்’ இலங்கை பக்கசார்பாக நடந்துகொள்ளாது என அளித்த வாக்குறுதி சில சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன.

எனினும், எமது பாதுகாப்பு முக்கியம். அதனால்தான் இராணுவ இரகசிய விடயத்துக்கு மேலதிகமாக மனித கடத்தல், போதைப்பொருட்கள் போன்ற ஏனைய விடயங்களினதும் முத்தரப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளினதும் அடிப்படையில் கொழும்பு சந்திப்பில் நாம் இந்தியாவுடன் இணைந்து செயல்படுகின்றோம் என பதிவிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை, இந்தியா, மாலைத்தீவு ஆகிய நாடுகளின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது சந்திப்பதை காணக்கூடிய வெளித்தோற்றத்தில் இந்தியாவின் தலைமையிலான முன்முயற்சியாக விளங்கிய ‘கொழும்பு பாதுகாப்பு சந்திப்பு’ (CSC) பற்றியும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கடல்சார் பாதுகாப்புக்கான ஒத்துழைப்பு அதன் முக்கிய அம்சமாகும். மேலும், உளவுத்துறை பகிர்வு வரையும் அது நீடிக்கின்றது. கடந்த ஆண்டு அதன் செயலகம் கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த சந்திப்பில் கான்ஃபாப்பில் மொரீஷியஸ் அதன் புதிய உறுப்பினராக பங்கேற்றார். பங்களாதேஷ் மற்றும் சீஷெல்ஸ் ஆகியவை இதன் அவதானிப்பு நாடுகளாக இருந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவும் அமெரிக்காவும்

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான இரகசிய அமெரிக்க ஆவணத்தில், சீனாவை சமநிலைப்படுத்தும் நோக்கத்தைக்கொண்டிருந்த, நிறுவனத்தின் வரையறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஏனையவற்றுக்கு மத்தியில் பட்டியல்படுத்துகின்ற ‘இந்து-பசுபிக் பிராந்திய அமெரிக்க மூலோபாயக் கட்டமைப்பு’ என்ற தலைப்பில் வெளியான 2018ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, ‘நிகர பாதுகாப்பாளரும் பெரும் பாதுகாப்பு பங்காளியும் என்ற வகையில் மாலைத்தீவு, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அடங்கலாக ஒரு சுதந்திர, தாராளமான, திறந்த பாதுகாப்பு ஒழுங்குக்கு பங்களிக்கும் பொருட்டு தெற்காசியாவில் வளர்ந்து வருகின்ற பங்காளித்துவ நாடுகளின் ஆற்றலை வலுப்படுத்துவதும்  இந்தியாவின் எழுச்சியை, திறனை விரைவுபடுத்துவதும் எமது நோக்கமாக இருந்தது.

அந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மாலைத்தீவு, அதன் ஆளுங்கட்சி உறுப்பினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், இந்தியாவுடன் கடல் சார்ந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனால் உதுரு திலாஃபல்ஹு தீவில் துருப்புக்களை நிறுத்த அனுமதிக்கப்பட்டது.

பயங்கரவாதம், போதைப்பொருள், ஆயுதங்களை கடத்தல், மனித கடத்தல், பண மோசடி போன்றவற்றை எதிர்க்கும் CSCஇன் நோக்கங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி முக்கியமானவை. மேலும், பிராந்திய ரீதியாக ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படும். சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, நட்பு நாடுகளின் பரந்த மூலோபாயத்தின் ஒரு பாகமாக, அதன் பயிற்சியில் இலங்கை அறியாமல் இழுக்கப்படுகிறதோ என்பதே சந்தேகம்.

அவ்வாறெனில், பெரும் அதிகாரப் போட்டியில் ‘பக்கசார்பாக நடந்துகொள்ளக் கூடாது’ என்ற ஜனாதிபதியின் குறிக்கோளுக்கு எதிராக அது இயங்காதா?

இது இந்து சமுத்திரம் தொடர்பான மோதலுக்கு வழிவகுக்கும். அதனால் நாம் அதை விரும்பவில்லை என்று ஜனாதிபதி உறுதியாகக் கூறினார்.

குவாட் (Quad) உறுப்பு நாடு என்ற வகையில் இந்தியா அமெரிக்காவின் ‘முக்கிய பாதுகாப்பு பங்காளியாக’ நியமிக்கப்பட்டாலும், இது எல்லா நேரங்களிலும் அமெரிக்காவை அடியொற்றிச் செல்ல வேண்டும் என்று அர்த்தமல்ல.

ரஷ்யாவுடனான அதன் பாதுகாப்பு உறவிலும், உக்ரைன் மீது அமெரிக்கத் தடைகளை மீறி ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதிலும் இந்தியா ‘மூலோபாய சுயாட்சியை’ பிரயோகிக்கின்றது.

எவ்வாறாயினும், 2020ஆம் ஆண்டு லடாக் (Ladakh) எல்லையில் உருவான மோதலுக்குப் பிறகு சீனாவுடனான உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டின் போது இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு சந்திப்பு எதுவும் இடம்பெறவில்லை.

பெரும் விம்பத்தை பார்க்கும்போது, இரண்டு ஆசிய அரக்கர்களுக்கு இடையே ஒரு வலுவான வர்த்தக உறவை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், அவற்றின் தலைவர்களின் அறிக்கைகள் அவற்றின் சர்ச்சைகளை தீர்ப்பதன் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை காட்டுகின்றன.

எது எப்படியிருந்தாலும், இந்திய – சீன உறவின் முரண்பாடுகள், அண்டை நாடுகளில், இந்தியாவின் மூலோபாய கணிப்பீடுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த எல்லைகளில் அமைதி நிலவுவது, மோதல் இல்லாத அமைதியான இந்து சமுத்திரத்துக்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் என்று ஊகிப்பது பாதுகாப்பானதாகும்.

லசந்த குருகுலசூரிய