சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் “தூய்மையான யாழ்பாணம் நோக்கிய பயணம்”!

253 0

சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில்  யாழ் மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையில் “தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்” எனும் சிரமதான பயணம் நான்கு  இடங்களில்  இருந்து  எதிர்வரும்  18ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது என சைவமகா சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில்  யாழ் மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையில் “தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்” எனும் சிரமதான பயணம் எதிர்வரும்  18ஆம் திகதி தொடக்கம்  25ம் திகதி வரை காலை 6.30 தொடக்கம் 12.30 வரை  நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 18ம் திகதி சிரமதான பயணத்தின் நிகழ்வுகள் நான்கு  இடங்களில்  ஆரம்பமாகவுள்ளது  .  அதாவது  நாச்சிமார்  கோவிலில் இருந்து கே.கே.எஸ் வீதியூடாகவும், கோம்பயன் மயானத்தில் இருந்து மானிப்பாய் வீதியூடாகவும், நல்லூரில்  இருந்து பருத்தித்துறை வீதியூடாகவும், யாழ் பல்கலையில் இருந்து பலாலி வீதியூடாகவும் என நான்கு  இடங்களில்  இருந்து  ஆரம்பித்து யாழ். போதனா வைத்தியசாலை முன்றலை வந்தடையவுள்ளது.

இவ் சிரமதான பயணத்தின் போது வீதியின் இருமருங்கிலும்  உள்ள பொலித்தீன்கள் துப்பரவு செய்யப்படவுள்ளன. மேலும் 10,000 கடைகளுக்கு பொலித்தீன் தொடர்பான  விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கப்படவுள்ளது.

மேலும் 18ம் திகதி போதனா  வைத்தியசாலை முன்றலில் நடைபெறவுள்ள ஒன்று கூடலிற்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமார், மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி  ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே பொதுமக்களின் ஆதரவையும் நல்கி நிற்கின்றோம்  எனவும் தெரிவித்துள்ளனர்.