அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், சிறீலங்காவுக்கும் சீனாவுக்கும் முக்கியமானது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், அரசியல் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களை சிறீலங்கா தீர்க்கும்வரை 1.1பில்லியன் டொலர் முதலீடு செய்யும் திட்டத்தை சீனா தள்ளிவைக்கவுள்ளது என வெளியான செய்தி தொடர்பாக ஊடவியலாளர் ஒருவரால் கேள் எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ஜெங் சுவாங், அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டமானது சீனாவுக்கும் சிறீலங்காவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இது சிறீலங்காவின் பொருளாதார, அபிவிருத்தி மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை செழிப்படையச் செய்வதற்கான திட்டமாகும்.
எமக்குத் தெரிவிந்தவரை திட்டம் உறுதியாக முன்னெடுக்கப்படுகின்றது. சந்தை மற்றும் வர்த்தக கொள்கைகளுக்கு ஏற்ப சமத்துவம் மற்றும் பரஸ்பர அடிப்படையில் திட்டத்தை முன்னகர்த்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நாங்கள் ஊக்குவிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

