தமிழகத்தில் 1,281 தரைப்பாலங்கள் மேம்பாலங்களாக தரம் உயர்வு- அமைச்சர் எ.வ.வேலு தகவல்

194 0

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. பழனி நாடார், குத்துக்கல்வலசை ஐ.டி.ஐ. சந்திப்பில் மேம்பாலம் கட்ட அரசு முன் வருமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து கூறியதாவது:-

திருமங்கலம்-ராஜாபாளையம் புறவழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிந்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும். மேம்பாலப் பணிகளை பொறுத்தவரையில் முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் 1,281 தரைப் பாலங்கள் மேம்பாலங்களாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளன. அனைத்து தரைப்பாலங்களும் விரைவில் மேம்பாலங்களாக மாற்றப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார்.