மீளக்குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு(காணொளி)

424 0

மீளக்குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நேற்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மருதநகர் கிராமத்தில் நடைபெற்றது.

பதின்நான்கு மில்லியன் யூரோக்கள் பெறுமதி வாய்ந்த பன்;முகப்படுத்தப்பட்ட வீடமைப்புத்திட்டத்தினூடாக 2 இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறவுள்ளனர். குறித்த திட்டத்திற்கான நிதி உதவியை ஜரோப்பிய ஒன்றியம் வழங்கியயுள்ளதுடன் திட்டத்தை செயற்படுத்தும் நடவடிக்கைகளை வேர்;ள்ட் விசன் லங்கா மற்றும் கபிடாட் ஃபோர் கியுமானிட்டி ஆகிய அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளன.

குறித்த திட்டத்தில், நேற்றையதினம் இரண்டு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.சத்தியசீலன், கரைச்சி பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.