2ம் லெப்.மாலதி அவர்களது நினைவுதினமும் லெப்.கேணல் திலீபனதும் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வும்.-Saarbeck.

320 0

15.10.2022 அன்று 2ம் லெப்.மாலதி அவர்களது நினைவுதினமும் லெப்.கேணல் திலீபனதும் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வும் Saarbeck நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது.
15:15 மணியளவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மூத்த உறுப்பினரான மெற்றிங்கன் தமிழாலய நிர்வாகி திரு.மார்க்கண்டு அருணகிரிநாதர் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமத்திய மாநில பொறுப்பாளரான திரு.முத்துவேலுராசா அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி நிகழ்வை உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். அதனைத்தொடர்ந்து மாவீரர்களின் உறவினர்களால் ஈகைச்சுடர் ஏற்றி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்வணக்கமும் சுடர்வணக்கமும் செய்யப்பட்டது. பின் நிகழ்வுக்கு வருகைதந்திருந்த அனைவரும் மாவீர்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தியபின் நிகழ்வுகள் ஆரம்பமானது.

விடுதலை நடனங்கள் ,விடுதலைப் பாடல்கள், கவிதைகள்,உரையாற்றல், கவியரங்கம் போன்ற நிகழ்வுகள் யாவும் விடுதலையோடும் மாவீரர்களை நினைவுபடுத்து நினைவுகளாகவும் அமைந்திருந்தன. இறைனே தமிழாலய மாணவர்கள் ,முன்சர் தமிழாலய மாணவர்கள்,இறைனே தமிழாலய ஆசிரியர்கள், பெற்றோர் போன்றவர்கள் பங்குகொண்டு நிகழ்வுகளை நடாத்தியிருந்தனர். மண்டபம் நிறைந்த உணர்வாளர்களைக் கொண்ட வணக்க நிகழ்வாக அமைந்திருந்தது.

மேலும் ஜேர்மென் மனிதநேய செற்பாட்டாளர்களில் ஒருவரான திரு. நடராஜா திருச்செல்வம் அவர்களின் சிறப்புரையும் இடம் பெற்றது. அவர் தனது உரையில் மாவீரர்களின் மகத்தான அர்பணிப்புகள் பற்றியும் அன்றைய நிகழ்வுக்குரிய மாவீரர்களின் வரலாறுகள் பற்றியும் மிக உணர்வுபூர்வமாக எமது அடுத்த தலைமுறைக்கு விளங்கும் வகையில் எடுத்துரைத்ததும் அதனை அனைவராலும் வரவேற்கக்கூடியதாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
19:15 மணியவில் தேசியக்கொடி இறக்கப்பட்டு „நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’ என்ற பாடலோடு அன்றைய நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.