மினுவாங்கொடை முக்கொலை : துப்பாக்கிதாரர்களுக்கு உதவியவர் கைது

187 0

மினுவாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு துப்பாக்கி தாரர்களுக்கு மோட்டார் சைக்கிள் பெற்றுக் கொடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 6 ஆம் திகதி மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கமன்கெதர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவருடைய இரு மகன்களும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மினுவங்கொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் துப்பாக்கிதாரர்களுக்கு பயணிப்பதற்காக மோட்டார் சைக்கிள் ஒன்றை பெற்றுகொடுத்தமை மற்றும் கொலைக்கு உதவியமை தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்டவர் 51 வயதுடைய ஒருவர் எனவும் பீல்வத்த, மினுவங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் மினுவங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் மினுவங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்