அரச சொத்துக்கள் முகாமைத்துவத்திற்கான புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

295 0

அரச சொத்துக்கள் முகாமைத்துவத்திற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் இவ்வாரம் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இவ்வாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டத் திருத்தம் செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவு திட்ட உரையில் பொருளாதாரத்தை திடமாகக் கட்டியெழுப்புதல், அரச சேவையை வினைத்திறனாக விருத்தி செய்தல் மற்றும் அரச வளங்களை பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்யும் நோக்கத்துடன் புதிய சட்டங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தல் மற்றும் தற்போது காணப்படுகின்ற ஒரு சில சட்டங்களின் ஏற்பாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய திறைசேரியின் கீழ் காணப்படும் கட்டுப்பாட்டாளர் தலைமையதிபதி அலுவலகத்தின் பணிகளை விரிவாக்கம் செய்து அதற்குரிய சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கும் , தேசிய சொத்துக்கள் ஆவணத்தை தயாரிப்பதற்கும் மற்றும் அரச சொத்துக்கள் தொடர்பாக மையப்படுத்திய தரவுத் தொகுதியை அறிமுகப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் பொருத்தமான ஏற்பாடுகளை உள்வாங்கி அரச சொத்துக்கள் முகாமைத்துவத்திற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.