கிளிநொச்சி இராணுவ முகாமின் ரெஜிமென்ட் சார்ஜன்ட் மேஜர் கைது

79 0

கிளிநொச்சி இராணுவ முகாமின் இரண்டாம் கமாண்டோ படைப்பிரிவின் ரெஜிமென்ட் சார்ஜன்ட் மேஜர் (RSM) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக முகாமில் இருந்து T-56 ரக துப்பாக்கியை தனது சகோதரருக்கு வழங்கிய குற்றத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் எல்பிட்டிய பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று கிளிநொச்சி முகாமில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.கிளிநொச்சி முகாமின் இரண்டாவது கொமாண்டோ படைப்பிரிவுக்கு சொந்தமான T-56 துப்பாக்கியே கடந்த புதன்கிழமை அஹுங்கல்லவில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கடந்த வியாழக்கிழமை (13) விசேட அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டுள்ளார்.

மெல்சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான சார்ஜன்ட் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளுடன் கடமையில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர் அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.