தமிழக சட்டசபை கூட்டம் இன்று 10 மணியளவில் நடைபெறுகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகரை சந்திக்க பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். சட்டசபை தொடங்குவதற்கு முன்பு சபாநாயகரை சந்திக்க பழனிசாமி தரப்பை சேர்ந்த 62 அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக பன்னீர் செல்வத்திற்குப் பதில் உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது தொடர்பாக பரிசீலிக்க வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

