தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் 2022 -பெல்சியம்

222 0
 1987 ஐப்பசி 10 ஆம் நாள் வீரகாவியமாகிய முதல் பெண் வித்து 2ஆம் லெப் . மாலதி அவர்களின் நினைவு எழுச்சி நாளும் மற்றும் 1987 ஐப்பசி 05 ஆம் நாள் இலங்கை இந்தியப் படைகளின் கூட்டுச் சதியினால் நஞ்சு அருந்தி வீர காவியமாகிய லெப் கேணல் குமரப்பா லெப் கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளின் நினைவு எழுச்சி நாளும் பெல்சியம் அன்ற்வெப்பனில் நினைவு கூரப்பட்டது. இதில் பெருமளவான மக்கள் உணர்வெழுச்சியுடன் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தியதோடு , 2ஆம் லெப் மாலதி மற்றும் லெப் கேணல் குமரப்பா லெப் கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளின் நினைவுரைகள் , நினைவு எழுச்சிக் கவிதைகள் , எழுச்சிப் பாடல்கள் , நடனம் , போன்ற நிகழ்வுகள் மூலம் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.