யேர்மனி ஸ்ருற்காட் நகரில் நடைபெற்ற 2ம் லெப். மாலதி, லெப் கேணல் தியாக தீபம் திலீபன் ஆகியோரின் வணக்க நிகழ்வு.

579 0

யேர்மனியின் தென்மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ருற்காட் நகரத்தில் 10.10.1987 அன்று, யாழ். கோப்பாய்ப் பகுதியில் இந்தியப் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட முதற் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் நினைவு நாளும், லெப் கேணல் தியாக தீபம் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும் 16.10.2022 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வருகை தந்திருந்த மக்கள் அனைவரும் மிகவும் உணர்வோடு சுடர், மலர் வணக்கம் செலுத்திய பின்பு அகவணக்கத்தோடு தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது நினைவுகளோடும் முதற் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் நினைவுகளோடும் எழுச்சி நிகழ்வுகள் ஆரம்பமாகியது. நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எழுச்சிப் பாடலோடும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரக மந்திரத்தோடும் வணக்க நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நிறைவடைந்தது.