இலங்கை பல மதங்கள் சமூகங்களை கொண்ட குழப்பமான நாடு 13 வது திருத்தமும் அந்த வகைக்குள் வருகின்றது நாங்கள் ஒரு புதிய உருவாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இலங்கைக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு உடன்படிக்கை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் இலங்கையின் துறைமுகங்களை வெளிநாடு பயன்படுத்துவதற்கு இலங்கை அனுமதிக்காது என்ற உத்தரவாதத்தை இந்தியாவிற்கு வழங்க முயற்சித்துள்ள மிலிந்த மொராகொட இதனை தெரிவித்துள்ளார்.
கடனில் சிக்குண்டுள்ள இலங்கையின் பேண்தகு பொருளாதார மீட்சிக்கு இந்தியா முக்கியமானது என குறிப்பிட்டுள்ள இலங்கை தூதுவர் மூலோபாய ரீதியில் முக்கியமான அமைவிடத்தில் உள்ள நாடு ஜப்பான் இஸ்ரேல் ஐக்கிய அரபு இராச்சியத்துடனான முத்தரப்பு ஒத்துழைப்பு குறித்து இந்தியாவுடன் ஆராய்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்தியாவுடன் பொருளாதார ஒருங்கிணைப்பை விரும்புகின்றது இது இலங்கை தனது பொருளாதார மாதிரியை விரிவுபடுத்துவதற்கு அனுமதிக்கும் அதன் மூலம் இலங்கை கடன் நெருக்கடியிலிருந்து விரைவில் விடுபடுவதை உறுதி செய்யும் எனவும் மிலிந்த மொராகொட குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் இந்தியாவுடன் செல்ல முடிந்தால் நீங்கள் நகரும்போது நாங்களும் நகரலாம் என தெரிவித்துள்ள இலங்கை தூதுவர் இந்தியாவுடன் பொருளாதார ஒருங்கிணைப்பு சாத்தியமானவுடன் புவிசார் அரசியல் விவகாரங்களிற்கு தீர்வை காணமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும் அதுவரை நாங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும்,சிவப்புகோட்டை கடக்காமலிருப்பதை உறுதி செய்வதற்காக புரிந்துணர்வை உருவாக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் பாதுகாப்பு கரிசனைகளும் இதனடிப்படையில் உள்ளன.இந்தியாவின் பாதுகாப்பிற்கு எது ஆபத்தானதோ அது எங்களிற்கும் ஆபத்து என நாங்கள் நம்புகின்றோம் இந்தியாவும் அவ்வாறே கருதுகின்றது என நாங்கள் கருதுகின்றோம் என மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் சீரடைந்துள்ள நிலையில் இலங்கை 80 வீதமாக அதிகரித்துள்ள பணவீக்க நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது,இலங்கை தற்போது இந்தியா சீனா பாரிஸ் கிளப் கடன் வழங்குநர்களுடன் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை இலங்கை பெறுவதற்கு அவசியமான இந்த பேச்சுவார்த்தைகள் இலங்கையை தமது செல்வாக்கின் கீழ் கொண்டுவருவதற்கு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் இடம்பெறும்போட்டியால் பாதிக்கப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிமிகப்பெரியதாக இல்லாவிட்டாலும் பொருளாதார ஈடுபாடு குறித்து அதனிடமிருந்து கிடைக்ககூடிய பாராட்டு முக்கியமானது என தெரிவித்துள்ள மிலிந்த மொராகொட இது முதலீட்டை ஊக்குவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை இந்தியா சீனா போட்டி பாதித்துள்ளது என நான் கருதவில்லைஆனால் எங்கள் பிராந்தியத்தில் அரசியல் ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புவிசார் அரசியல் எங்களின் நடவடிக்கைகள் அனைத்திலும் தாக்கத்தை செலுத்துகின்றது என்பதில் சந்தேகமில்லை எனவும் மிலிந்த மொராகொட குறிப்பிட்டுள்ளார்.
அரசமைப்பின் 13 வது திருத்தத்தின் கீழ் தமிழ் மக்களின் விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக போதிய நடவடிக்கைகளை இலங்கை எடுக்கவில்லை என இந்தியா மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ள அதேவேளை இது புதிய விடயமில்லை என மிலிந்த மொராகொட குறிப்பிட்டுள்ளார்.
சொல்லும் விடயத்தின் நுணுக்கம் மாறியிருக்கலாம் ஆனால் இந்தியா அதன் சாரம்சத்தில் நிலையாக உள்ளது என குறிப்பிட்டுள்ள இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் அரசியல் ரீதியில் இலங்கை மாறும்கட்டத்தில் உள்ளது நாட்டில் சமூக மற்றும் அரசியல் ஒப்பந்தங்களை மீள் பரிசீலனை செய்யவேண்டிய தேவையுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பல மதங்கள் சமூகங்களை கொண்ட குழப்பமான நாடு 13 வது திருத்தமும் அந்த வகைக்குள் வருகின்றது நாங்கள் ஒரு புதிய உருவாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

