சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் – சுப்பிரமணியசாமி

348 0

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என சுப்பிரமணியசாமிகுறிப்பிட்டுள்ளார்.

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணிசாமி டிவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக சசிகலாவை பெங்களூரு சிறையிலிருந்து தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்.

இது தொடர்பாக சசிகலாவின் வக்கீல்கள் 2 நாளில் சுப்ரீம் கோர்ட்டை அணுகவேண்டும்.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனதும் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்
என அவர் கருத்து கூறி உள்ளார்.