சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற சசிகலா நேற்று மாலை 5.15 மணிக்கு பெங்களூர் பரப்பன அக்ரகார சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் சரண் அடைந்தார்.
கோர்ட்டு நடைமுறைகள் முடிந்ததும் மாலை 6 மணிக்கு சசிகலா சிறைக்குள் அழைத்துச்செல்லப்பட்டார். முன்னதாக மருத்துவ பரிசோதனைகள் நடந்தது. அது முடிந்ததும் உறவினர்களை சந்திக்க 15 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது.
அப்போது கணவர் நடராஜன் அருகில் சசிகலா வந்தார். இருவரும் கண்கலங்கினர். சில விநாடிகள் அமைதிக்குப் பிறகு கணவரை கட்டிப்பிடித்தவாறு “ எனது சொந்த முயற்சியால் ஜெயிலில் இருந்து விரைவில் வெளியே வருவேன், கவலைப்பட தேவையில்லை, என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பாருங்கள்” என்று துக்கத்துடன் கதறி அழுதவாறு கூறினார்.
அவரை நடராஜன் சமாதானம் செய்தார். தனக்கு வழங்கப்பட்ட 15 நிமிடங்கள் முடிந்த நிலையில் சசிகலா சிறைக்கு சென்றார்.

