சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில், முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மதுசூதனன், பொன்னையன், மாஃபா பாண்டியராஜன், கேபி முனுசாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம்
சசிகலாவின் குடும்ப ஆட்சிதான் இன்று பதவியேற்றுள்ளது. ஜெயலலிதா யாரை ஒதுக்கி வைத்தாரோ அவர்கள்தான் கட்சியை இயக்குகின்றனர்.
இது அதிமுக ஆட்சி அல்ல. சசிகலாவின் குடும்ப ஆட்சி. ஒரு சதவீத மக்கள் கூட விரும்பாத ஆட்சி இன்று பொறுப்பேற்றுள்ளது. மக்கள் விரும்பாத முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால், கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்களே, தற்போது அவரது வீட்டில் உள்ளனர் இந்த ஆட்சியை நீக்கி, மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம்.
குடும்ப ஆட்சியை நீக்க ஜெயலலிதா நினைவிடத்தில் சபதம் ஏற்றுள்ளோம். எம்.எல்.ஏக்கள் நியாயமான முடிவை எடுக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களிடையே விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளோம்.
மக்கள் விரோத ஆட்சியை நீக்கும் வரை ஓயமாட்டோம். சசிகலா தவிர யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.
ஜெயலலிதா ஒதுக்கி வைத்தவர்கள் கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார் என்று தெரிவித்தார்.
முன்னதாக பேட்டி அளித்த மதுசூதனன், ”மக்கள் விரும்பாத முதல்வரை ஆதரித்துள்ளனர். சசிகலாவின் குடும்பம் கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஓ பன்னீர் செல்வம் தலைமையில் ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

