ஜெயலலிதா நினைவிடத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை

340 0
தமிழகத்தின் 13வது முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்று கொண்டார்.
தொடர்ந்து குழுக்களாக அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
இதையடுத்து, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சரவை சகாக்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்தனர்.
ஜெயலலிதா நினைவிடத்தில் முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினர்.
அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவிடத்திலும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் மற்றும் அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.