05 இளைஞர்கள் பயணித்த வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கலவான ப்ரஜெக்ட் வீதி கெவல் 10 பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய நால்வரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் வாகனத்தை செலுத்திச் சென்ற இளைஞன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தில் கல்வி கற்கும் கலவான தபஸ்ஸர கந்த பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய அஞ்சன சந்தேஷ் என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

