கடற்பிரதேச மக்களுக்கு அவதான எச்சரிக்கை

442 0

நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடலோர வாழ் மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.