பிரச்சினைகள் இருப்பின் அதனை தீர்த்துக் கொள்ளும் வரை தங்களது கல்வியினை சீர்குலைத்துக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர் சங்கத்திடம் இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
மாலபே தனியார் மருத்துவமனை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பல்கலைக்கழக மாணவர் சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற போது இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

