காட்டு யானை தாக்கி ஒருவர் பலி !

199 0

மத்தள பிரதேசத்தில் செவ்வாய்கிழமை (11)  காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மத்தள பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருவான, கல்வல கெலெபத பிரதேசத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த நபர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதுடைய, 8 ஆம் கட்டை – அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

மத்தள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.