மீன்வளத்தை மேம்படுத்த நடவடிக்கை- பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

172 0

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் மீன் வளத்தை அதிகரிக்கும் திட்டத்தை, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்படுத்தி வருகிறது. இதன்படி பச்சை வரி இறால் குஞ்சுகளை வளர்த்து, கடலில் விடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தின் நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பிப்ரவரி 2022 முதல் இதுவரை 19.44 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் விடப்பட்டுள்ளன.

மேலும் ரூ.168.948 லட்சம் மதிப்பீட்டில் மேலும் 200 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகளை, மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி பகுதிகளில் விடப்பட்டு வருகிறது. இதன்படி1.2 மில்லியன் இறால் குஞ்சுகள், மரைக்காயர் பட்டினம், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் நேற்று விடப்பட்டன. நிகழ்ச்சியில மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் தமிழ்மணி, மூத்த விஞ்ஞானி ஜான்சன் கலந்து கொண்டனர்.