காலி முகத்திடல் சுற்றுவட்ட வீதி பூட்டு

292 0

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டத்தரணிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து காலி முகத்திடலுக்கு முன்பாக இன்று (10) பிற்பகல் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியாக சென்ற போது, ​​பொலிஸார் அவர்களை தடுக்க முயற்சித்தனர்.

குறித்த போராட்டத்திற்கு பொலிஸாரிடம் அனுமதி பெற்றதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்போது பொலிஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.