உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடக்க நீதிமன்றை அணுகுவோம் -ராமதாஸ்

392 0

201607110827018300_Ramadoss-Urges-government-should-provide-housing-people_SECVPFகலவரம் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடக்க கோர்ட்டை அணுகுவோம் என்று டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.பா.ம.க. ஒவ்வொரு ஆண்டும் அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு நிழல் பட்ஜெட் ஒன்றை வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான நிழல் பட்ஜெட்டை டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று வெளியிட்டார். இதில் மாநிலத்தில் வருவாயை பெருக்கும் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.மின், பஸ் கட்டணம் குறைப்பு, 1 கோடி பேருக்கு வேலை, முழு மதுவிலக்கு, ஊழல் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை, உள்ளிட்ட 100 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மேலை நாடுகளில் இந்த மாதிரி எதிர்க்கட்சிகள் நிழல் பட்ஜெட் வெளியிடும் வழக்கம் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பா.ம.க. மட்டும் இந்த பணியை செய்து வருகிறது. எங்கள் நிழல் பட்ஜெட் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் பயன்பட்டு இருக்கிறது.

இதை அதிகாரிகளே எங்களிடம் கூறி இருக்கிறார்கள். எனவே இந்த பட்ஜெட்டை வெளியிடுவதில் பெருமை அடைகிறோம்.உள்ளாட்சி தேர்தலில் புதிய ஜனநாயகத்தை உருவாக்க ஆளுங்கட்சி தயாராகி வருகிறது. உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. கையாள போகும் இந்த ஜனநாயகத்தால் மிகப்பெரிய கலவரம் ஏற்படும். எனவே இதுபற்றி மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து இருக்கிறோம். ஐகோர்ட்டையும் அணுகி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வழிகாட்டும் நெறிமுறையை பெற உள்ளோம்.

தமிழ்நாட்டில் 50 கோடி பனைமரங்கள் இருந்தது. தற்போது 5 கோடிக்கு சுருங்கி விட்டது. பனைமரம் சாதாரண மரம் அல்ல. அதை வெட்ட வேண்டுமென்றால் கோர்ட்டு அனுமதி பெற வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலு, மு.ஜெயராமன், அருள், கன்னியப்பன், வெங்கடேசன், ஏழுமலை, கோயம்பேடு பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.