புதிய ஊடக பணிப்பாளராக பிரிகேடியர் ரவி ஹேரத் பொறுப்பேற்பு

143 0

இலங்கை சமிக்ஞை படையணியை சேர்ந்த பிரிகேடியர் ரவி ஹேரத் இன்று 19 ஆவது புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவப் பேச்சாளராக தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று (06) காலை இராணுவ தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நியமனத்திற்கு முன்னர் இவர் இராணுவ தலைமையகத்தில் முன்னோக்கு திட்டமிடல் மற்றும் அமுலாக்கப் பிரிவு பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.