தாய்லாந்தில் முன்பள்ளி குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் துப்பாக்கி பிரயோகம் – 34 பேர் பலி

198 0

தாய்லாந்தில் உள்ள முன்பள்ளி குழந்தைகள் பராமரிப்பு நிலையமொன்றிற்குள் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

தாய்லாந்தின் வடகிழக்கு நகரான இல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் தலைமறைவாகியுள்ளார்.

துப்பாக்கி பிரயோகமும் கத்திக்குத்து தாக்குதலும் இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவரே இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.