யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36வது பொதுப் பட்டமளிப்பு விழா இன்றைய தினம் காலை 9மணியளவில் யாழ் பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியது.
36வது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, இன்று ஆரம்பித்துள்ளதுடன் நாளை(07),நாளை மறுதினமும்(08) நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் 185 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2046 உள்வாரி மாணவர்களுக்கும், 147 தொலைக்கல்வி மாணவர்களுக்குமாக 2378 பேருக்குப் பட்டங்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

