கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 சுட்டெண் முந்தைய நாளிலும் பார்க்க 5% மேல் வீழ்ச்சி அடைந்ததால், கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் இன்று (04) தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இதை அடுத்து, வழக்கமான வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் காலை 10.41 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும்.
இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் விதிமுறைகளின்படி, S&P SL20 சுட்டெண் முந்தைய வர்த்தக நாளில் இருந்து 5% க்கு மேல் வீழ்ச்சியடைந்தால், தினசரி வர்த்தகம் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

