துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் நபர்களுக்கான அறிவிப்பு

194 0
துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்தல் தொடர்பான விசேட அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.