காத்தான்குடி கடலில் தோணியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இன்று திங்கட்கிழமை (03) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்ப்பலா பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய மீராசாயிப் முபாரக் என்ற மீனவர் சம்பவதினமான நேற்று இரவு தனது தோணியில் பாலமுனை கடற்கரையில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றவர் இன்று (03) திங்கட்கிழமை காலை வரை கரைக்கு திரும்பாததையடுத்து அவரை கடலில் தேடியபோதும் அவரை கண்டுபிடிக்கவில்லை
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அவரை கடற்படையினரின் உதவியுடன் தேடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை நாட்டில் தற்போது காலநிலை மாற்றத்தால் கடும் காற்று வீசிவருவதால் காலி தொடக்கம் அம்பாறை வரையும் மீனவர்கள் செல்லவேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

