அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு 26 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இதுவரை அக்குழுவுக்கு தலைவர் நியமிக்கப்படவில்லை. தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியினர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ள நிலையில்,
தலைமைத்துவ பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க முடியாது என ஆளும் தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் நியமனம் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.
பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் அரசாங்கப் பொறுப்பு முயற்சி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு தெரிவு குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்ற அமர்வு நேற்று திங்கட்கிழமை கூடிய போது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களின் பெயரை சபாநாயகர் வருமாறு அறிவித்தார்.
ஜகத் புஸ்பகுமார,சானக வகும்பர,லொஹான் ரத்வத்தே,இந்திக அனுருத்த,டி.சி சானக,சாந்த பண்டார,அநுர திஸாநாயக்க,ரவூப் ஹக்கீம்,பாட்டளி சம்பிக்க ரணவக்க,மஹிந்தானந்த அளுத்கமகே,ரோஹித அபேகுணவர்தன,ஹர்ஷ டி.சில்வா, இரான் விக்கிரமரத்ன,நிமல் லன்ஷா,எம்.எம்.எம். முஸ்ஸாரப்,நளீன் பண்டார,எஸ்.எம்.மரிக்கார்,முஜிபூர் ரஹூமான்,ரோஹினி குமாரி விஜேரத்ன,
முற்று மற்றும் சஞ்ஜீவ எதிரிமான்ன,ஜகத் புஸ்பகுமார,பிரேம்நாத் சி.தொலவத்த,உபுல்மஹேந்திர ராஜபக்ஷ,சாணக்கியன் இராசமாணிக்கம்,ராஜிகா விக்கிரமசிங்க,மதுர விதானகே,ரஞ்சித் பண்டார. ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

