கஜமுத்துக்களுடன் ஐவர் கைது

160 0

மாத்தளை – அலுவிகாரை விளையாட்டு அரங்கிற்கு அருகில் கஜமுத்துக்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனமொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெலிமடை மற்றும் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 21, 25, 26 மற்றும் 28 வயதுடையவர்களாவர்.

சந்தேகநபர்களை இன்று மாத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.