தமிழகம் முழுவதும் அக்.12-ல் அமமுக ஆர்ப்பாட்டம்: சென்னையில் டிடிவி தினகரன் பங்கேற்பு

196 0

 தமிழக அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் அக்.12-ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அமமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சித்தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுத்துறைகள் தோறும் மலிந்து வரும் முறைகேடுகள், மக்களைப் பாதிக்கும் மின் கட்டண உயர்வு, தேர்தல்வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுதல், அமைச்சர்களின் அடாவடி பேச்சு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து அமமுக சார்பில் தமிழகம் முழுவதும் அக். 12-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையேற்க உள்ளார். அதே நாளில் தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்டங்களில் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.