மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றுச் சாதனை

123 0

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 3 மாதங்களாக பராமரிக்கப்பட்ட நிறை குறைந்த குழந்தை ஆரோக்கியத்துடன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுவொரு வரலாற்றுச் சாதனை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வைத்தியசாலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கொக்கட்டிச்சோலை கடுக்காமுனை கிராமத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு  சுமார் 500 கிராம் நிறையுடைய ஒரு பெண் குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்திருந்தது.

அந்தக் குழந்தை கடந்த 84 நாட்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முதிராத குழந்தை பராமரிப்புப் பிரிவில் அதிதீவிர கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அதன் நிறை 1.45 கிலோ கிராம் என்ற வளர்ச்சி  நிலையை அடைந்தபோது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தயாயும் சேயும் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியசாலை நிருவாகம் தெரிவித்துள்ளது.