ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடும் கட்சி!

332 0

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான குழுவின் தலைவர் புதுகல ஜினவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், வடக்கு கிழக்கை தவிர ஏனைய 18 மாவட்டங்களில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதற்காக விண்ணப்பங்களை கோரியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விண்ணப்பங்களை அனுப்பும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை பத்தரமுல்லை பன்னிப்பிட்டிய வீதியில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்களில் போட்டியிடாத போதிலும் யாழ்ப்பாணத்தில் தமிழ் பௌத்தர் ஒருவர் வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்துள்ளதாகவும் ஜினவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.