மகிந்தவின் வீட்டை கோட்டாபயவுக்கு வழங்குமாறு ரணிலிடம் கோரிக்கை

83 0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள வீட்டை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு வழங்குமாறு அவரது தனிப்பட்ட செயலாளர் சுகிஷ்வர் பண்டார கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளருக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள பீ20 வீட்டிலேயே மகிந்த தங்கியுள்ளார். எனினும் அவர் இதற்கு முன்னர் விஜேராம பிரதேசத்தில் உள்ள வீட்டிலேயே தங்கியிருந்தார்.

அந்த வீட்டில் தற்போது பழுது பார்க்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பழுது பார்க்கும் நடவடிக்கையின் பின்னர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அந்த வீட்டில் குடியேறவுள்ளார்.

அவர் விஜேராம வீட்டில் குடியேறிய பின்னர் அவர் தற்போது தங்கியிருக்கும் பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள பீ20 வீட்டை கோட்டாபயவுக்கு வழங்குமாறு அவரது தனிப்பட்ட செயலாளர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து சிறப்பு சலுகைகளும் கோட்டாபய ராஜபக்சவுக்கும் வழங்கப்படும் என ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.