ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி

138 0

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி  அனைத்து ஊழல்அரசியல்வாதிகளையும் அழிக்கும் என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை தெரிவிப்பதற்காக என்னை சிஐடியினர் விசாரணைக்கு அழைக்கலாம் ஆனால் ஒக்டோபர் மாத இறுதியில்  நிச்சயம் இந்த  புரட்சி நிச்சயமாக வெடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சுனாமி தாக்கும்போது முன்னைய ஜனாதிபதியின் நிலை தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும் என தெரிவித்துள்ள ஹிருணிகா எந்த புரட்சியும் முன் அறிவிப்புடன் நிகழ்வதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த அரகலயவில் பெண்களே முக்கிய பங்களிப்பை செய்தனர் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த தடவையும் நாங்கள் தலைமைத்துவம் வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியின் நாட்கள் எண்ணப்படுகின்றன  மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்களே கடந்த தடவை வீதியில் இறங்கினார்கள் ஆனால் இம்முறை வறிய மக்கள் எழுச்சிக்கு தலைமை தாங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.