சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

174 0

சிட்னியில் கரும்பு தேரைகள் என அழைக்கப்படும் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கரிசகைள் வெளியாகியுள்ளன.

சிட்னியில் உள்ள தனியார் காணியில் 20 கரும்பு தேரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதனை தொடர்ந்து மேலும் பல தேரைகள் காணப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடும் விசத்தன்மை கொண்ட கரும்பு தேரைகளை சிட்னியிலிருந்து 117 கிலோமீற்றர் தொலைவில் உள்ள காணியொன்றில் பொதுக்கள் கண்டுள்ளனர்.

இதுவரை 20 தேரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட வகை தேரைகள் மேலும் காணப்படலாம் என விவசாய அமைச்சர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் எனஅவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தற்போது அலட்சியத்திற்கான நேரமில்லை இந்த வகை விலங்கினங்கள் எங்கள் உள்நாட்டு பூர்வீக விலங்கினங்களிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வகை தேரைகள் அந்த பகுதிக்குள் எவ்வாறு வந்துசேர்ந்தன என்பது குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றன

இவ்வகை தேரைகள் வாகனங்களில் ஏறி தொலைதூரம் செல்வதும் அல்லது மக்களின் சப்பாத்துக்கள் மூலம் தொலைதூரம் செல்வதும் வழமையான விடயம் என ரிக் சைன் என்ற பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரிரு தேரைகள் ஒரு இடத்தில் காணப்படுவது வழமை ஆனால் இவ்வாறான எண்ணிக்கையில் வருவது வழமைக்குமாறான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கரும்பு தேரைகள் விஷசுரப்பிகளை கொண்டுள்ளன இவை  அதிகளவு நச்சுத்தன்மை கொண்டவை என்பதுடன் அனேகமான விலங்குகளிற்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை.

வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகளையும் காட்டுவிலங்குகளையும் கொல்லக்கூடிய தன்மை வாய்ந்த  கரும்புதேரைகள் நாய்களிற்கு மிகவும் ஆபத்தானவை