மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது

152 0

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை, உழவன் ஊர் மற்றும் கல்லாறு போன்ற  பகுதிகளில் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

எனினும், சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 4 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட  தடையப் பொருட்களை இன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.