சிறையில் உள்ள நாமலுக்கு சொகுசு மெத்தை

338 0

New-Picture1மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஸவுக்கு மெத்தை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நாமலின் வைத்தியரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சொகுசு மெத்தையானது நாமலின் வீட்டிலிருந்து தருவிக்கப்படவுள்ளது.

இதேவேளை தற்சமயம் நாமல் சிறைச்சாலையில் தலையணையை மாத்திரம் பயன்படுத்தி வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் நாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அருகில் உள்ள கட்டித்திலே, 30 போதைப் பொருள் வியாபார சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.