நெற் செய்கை காணிகளை மீள வழங்க நடவடிக்கை

103 0

அம்பாறை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நெற் செய்கை காணிகளை மீள காணி உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.

மிக நீண்டகாலமாக குறித்த காணிகளை பராமரித்து வரும் சட்டரீதியிலான காணி உரிமத்தைக் கொண்டுள்ள ஏழை விவசாயிகளின் காணிகளை வனஜீவராசிகள், வன இலாகா திணைக்களங்கள் சுவீகரித்து, அது வர்த்தமானி ஊடாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இக்காணிகளை விடுவிப்பது தொடர்பாக வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வன இலாகா, வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் காணி விடுவிப்பு தொடர்பான இறுதிக் கட்ட நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில் சுவீகரிக்கப்பட்டு, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள காணிகளை உரிய விவசாயிகளுக்கு வழங்குவதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர வாக்குறுதியளித்துள்ளார்.

2010, 2016 ஆகிய காலப்பகுதியில் வன இலாகா மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் நெற்செய்கை காணிகளை சுவீரித்து வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

மூன்று தசாப்த கோரிக்கையாக இருந்து வரும் இக் காணிகளை விடுவித்து உடனடியாக காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவித்தார்.